பெங்களூர்

ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து, சின்ன ஸ்கூல்ல படிச்சு, வாரத்துக்கு ஒரு முறை நாலு தெரு தள்ளி இருக்கற பெரியம்மா வீட்டுக்கு போறது தான் “வெளிய போறது” அப்படிங்கற சுழல்ல 10வது வரை படிச்ச ஒரு சின்ன பையன்ன ஒரு பெரிய ஊர்ல இருக்கற பாலிடெக்னிக்ல சேத்த  கதை.

பையன் நல்ல பையன் தான். அனா அவன் அந்த பெரிய ஊர்ல இருக்கற சூழலுக்கு இன்னும் தயார் ஆகல. போர போக்க பாத்தா ஆகவே மாட்டான். அது அவன் தப்பு இல்ல.

பெங்களூறும் அப்படி தான். ரொம்ப நல்ல ஊர். அமைதியான இடம். நல்ல climate. சில சின்ன சின்ன தொழிற்ச்சாலைகள். சோம்பேறித்தனமா, slowmotionல ஓடிட்டு இருந்த ஒரு பஸ்க்கு formula one car engine போட்ட கதையா தறி கேட்டு திக்கு திசை தெரியாம ஓடிட்டு இருக்கு.

Leave a comment