STD, ISD, PCO என்ற தங்க எழுத்துக்கள் அந்த கருப்பு கண்ணாடி கூட்டின் மேல்…
அதை சுற்றித்தான் அந்த பெட்டிக்கடை இருந்தது…
ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒவ்வொரு நாளும் அங்க இருந்து தான் “நான் bus stop ல இருக்கேன்…”னு அவ phone பண்ணுவா….
அதே இடத்துலேந்து தான் அவன் அவள் வீட்டுக்கு பொன முதல் முறை கூப்பிட்டான்…
“நான் bus stop வந்துட்டேன்”
“சரி, நான் யாரயாவது வர சொல்லரேன்”
“நீ வரியா?”
“உனக்கு எங்க area பத்தி சொல்லி இருக்கேன் இல்ல… அப்பரம் என்ன? தம்பி வருவான்”
“உன் தம்பிய நான் பாத்தது கிடயாது”
“அவன் உன்ன பாத்து இருக்கான். Photoல. எங்க வீட்ல எல்லாருக்கும் உன்ன நல்லா தெரியும்…”
“என்னனு”
“என் best friend நு…. உன்மை தானே?”
“ஆமாம். ஆனா part of it”
—
அங்க ஒரு பெட்டிக்கடை இருந்தது…
அது இப்போவும் இருக்கு…
ஆனா அங்க இல்ல…
வேர எங்கேயொ…
அது அதே கடயா?
ஒரு கடையோட unique identifier என்ன?
கடை பெயர், உரிமயாளர்.. இந்த இரண்டும் தானா?
இல்ல கடையொட இடமும் உண்டா?
இதை வேச்சு தான் கடை இருக்கா இல்லயா அப்படீங்கர முடிவுக்கு வர முடியும்…
—
இதே தான் அவளுக்கும்….
—
அவள் இருக்கிராளா இல்லயா என்பது
அவள் என்பது என்ன என்பதை பொருத்து…
அவளில் இவனும் இருந்தானா? இல்லை அவளோடு இவன் இருந்தானா?
பேட்டிகடை பக்கத்து தெருவுக்கு போனதா இல்லை
இந்த கடை மூடி வேரு கடை திரந்ததா?
delete and insertஆ இல்ல updateஆ?